குருகிராம்: ''நாட்டில் பயங்கரவாதத்தை வேரறுக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலன மத்திய அரசு தொடர்ந்து

குருகிராம்: ”நாட்டில் பயங்கரவாதத்தை வேரறுக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலன மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது,” என, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பேசினார்.

கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி, சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டம் முக்ரானா காடுகளில் நக்சல்களுடன் நடந்த சண்டையில் 75 மத்திய ரிசர்வ் படை வீரர்களும், ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தனர்.

தந்தேவாடாவில் வீரமரணம் அடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் நினைவாக, குருகிராமில் நேற்று நடந்த த தியாகிகள் தின நிகழ்ச்சியில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பேசியதாவது:

ஒரு உண்மையான தேசபக்தர் நாட்டுக்காக தன்னையே தியாகம் செய்வார். தியாகிகளின் குடும்பங்களுக்கு ஹரியானா மாநில அரசு உறுதுணையாக நிற்கும்.

தேசமே முதன்மையானது என்ற மந்திரமே இன்று நம் நாட்டுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா தனது எல்லைப் பாதுகாப்பை மட்டுமல்லாமல், உள்நாட்டுப் பாதுகாப்பையும் வலுப்படுத்தியுள்ளது.

நாட்டில் பயங்கரவாதத்தை வேரறுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாட்டின் பாதுகாப்பு என்பது ஆயுதப் படையின் தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல. நாடிலுள்ள 140 கோடி மக்களின் கடமை. வாழ்வின் மிக உயர்ந்த நோக்கம் நாட்டுக்கான சேவைதான் என்பதை தியாகிகளின் வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

ஹரியானா மாநிலம் வீரர்களின் பூமியாக திகழ்கிறது. ஹரியானாவின் ஒவ்வொரு வீட்டிலும் தேசபக்தி உணர்வு மிளிர்கிறது.

நாட்டின் ஆயுதப்படைகளில் உள்ள ஒவ்வொரு பத்தாவது வீரரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவரே.

தந்தேவாடா போன்ற சம்பவங்கள், விடுதலைப் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நினைவூட்டுகின்றன. இருப்பினும், நமது வீரத் தளபதிகள் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றனர்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினர் நலனுக்காக, ‘ராணுவ மற்றும் துணை ராணுவ நலத்துறை’ யை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, தந்தேவாடாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கும், சுதந்திர போரட்ட தியாகிகள் பகத் சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கும் முதல்வர் சைனி மலரஞ்சலி செலுத்தினார்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் நலனுக்காக, 38.25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, சி.ஆர்.பி.எப்., டி.ஐ.ஜி., பரமசிவத்திடம் சைனி வழங்கினார்.

Source link