குறையும் தங்கம் விலை இப்போது வாங்கலாமா?

போ ர் பதற்றம் சற்று தணிந்துள்ள சூழலில், எம்.சி.எக்ஸ்., சந்தையில் நேற்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்துள்ளது.

ஏப்., மாத முன்பேர வர்த்தக ஒப்பந்தத்துக்கான 10 கிராம் தங்கம் நேற்று அரை சதவீதத்துக்கும் மேல் குறைந்து 1.38 லட்சம் ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. அதேபோல, மே மாத முன்பேர வர்த்தக ஒப்பந்தத்துக்கான வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 1.50 சதவீதம் வீழ்ச்சிகண்டு, 2.21 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.

உலகளாவிய சந்தையில், தங்கம் ஒரு அவுன்ஸ் 4,300 டாலர் என்ற அளவை நோக்கி சரிந்தது. மேற்காசிய பகுதியில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் அதன் காரணமாக எரிசக்தி விலைகள் உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதனால், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை நீண்ட காலத்துக்கு உயர்வாகவே வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, தங்கத்தின் மீதான ஆர்வத்தை குறைத்துள்ளது. மேலும், அமெரிக்க டாலர் குறியீடு வலுவடைந்து வருவதும், தங்கம் மற்றும் வெள்ளி விலை மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தங்கத்துக்கு 1.30 லட்சம் ரூபாய்; வெள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் என்பது முக்கியமான ஆதரவு விலையாக இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆதரவு விலை

தங்கம் (10 கிராம்)

ரூ.1.30 லட்சம்

வெள்ளி (1கிலோ)

ரூ. 2.00 லட்சம்

Source link