குழந்தைகள்போல் நடந்து கொள்கின்றனர்: மக்களவையில் அமளி பற்றி மத்திய மந்திரி கிரிராஜ் பேட்டி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை 2 கட்டங்களாக கூட்டத்தொடரை நடைபெற உள்ள சூழலில், தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் கடந்த 2 மற்றும் 3 ஆகிய நாட்களிலும் இன்றும் நடந்தது. எனினும், கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தேர்தல் தொடர்பாக நடந்து வரும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதனால், அவை அடிக்கடி ஒத்தி வைக்கப்படும் சூழல் எழுந்தது. இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் 8 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவையிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் மூத்த பா.ஜ.க. தலைவர் மற்றும் மத்திய மந்திரியான கிரிராஜ் சிங் அளித்த பேட்டியின்போது, ஜனாதிபதி உரையின்போது இதுபோன்று அமளியில் ஈடுபடுவது என்பது இதுவே முதன்முறை. இது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. அவர்கள் குழந்தைகள்போல் நடந்து கொள்கின்றனர் என்றார்.

காங்கிரஸ் தலைமையை பற்றி அவர் கூறும்போது, அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இது நேரு குடும்ப அரசாட்சி என்றா? அல்லது காங்கிரஸ் கட்சி அலுவலகம் என்றா? அல்லது சோனியா காந்தியின் வீடு என நினைத்து விட்டனரா? என காரசாரத்துடன் கேட்டார்.

இதேபோன்று மத்திய மந்திரி சிராக் பஸ்வான் கூறும்போது, பிற எதிர்க்கட்சிகள் தங்களுடைய பார்வைகளை அவையில் முன்வைக்க கூட காங்கிரஸ் கட்சி அவர்களை விடவில்லை என குற்றச்சாட்டாக கூறினார்.

Source link