மேலும், இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இப்போது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளின் குடியிருப்பு மீது நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தாக்குதல் விரிவு செய்யும் நோக்கில் இந்த முடிவு என ஈரான் இதை சொல்லியுள்ளது. அதே நேரத்தில் தரைவழி தாக்குதலுக்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்தியர் உயிரிழப்பு: இந்த சூழலில் குவைத் நாட்டில் உள்ள மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. இதை திங்கட்கிழமை (மார்ச் 30) அன்று குவைத் அரசு உறுதி செய்தது. “குவைத் அரசுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டுள்ள தாக்குதலின் ஒரு பகுதியாக, மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலைய சேவை கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த கட்டிடம் பெரிய அளவில் சேதமடைந்தது” என்று குவைத் மின்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
