கூடலுார் : கூடலுார் செக்சன்-17 நிலப்பிரச்னை தொடர்பாக, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், கண்டன ஊர்வலம்,

கூடலுார் : கூடலுார் செக்சன்-17 நிலப்பிரச்னை தொடர்பாக, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில், 34,476 ஏக்கர், செக்சன்-17 பிரிவு என அரசால் வகைப்படுத்தப்பட்ட, நிலப்பிரச்னை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த நிலம் தொடர்பான வழக்கில், மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மக்கள் வாழ்ந்து வரும், 3,476 ஏக்கர் நிலத்தை, வருவாய் நிலமாக மாற்றி அவர்களுக்கு உரிமைகள் கொடுக்கவும்; மீதமுள்ள நிலத்தை, வன நிலமாக மாற்றவும்’ அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

‘இந்த மனு, கூடலுார் மக்களை பாதிக்கும்’ என, வலியுறுத்தி, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று, கூடலுாரில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாநில அரசை கண்டித்தும், மனுவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Source link