– நமது சிறப்பு நிருபர் –
த.வெ.க.,வுடனான கூட்டணி குறித்து பா.ஜ.,வின் தொடர் முயற்சிக்கு பலன் கிடைக்கும் வகையில், சமீபத்தில் நடந்த த.வெ.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், ‘தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி வைக்கலாமா’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களில், 90 சதவீதம் பேர் கூட்டணி வைக்க ஆதரவு தெரிவித்ததுடன், விஜய் எடுக்கும் முடிவுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் கூறினர்.
அதன் தொடர்ச்சியாக, மாநில நிர்வாகிகளின் முடிவை விஜய் கேட்டுள்ளார். கூட்டணி விஷயத்தில் ‘கிளைமேக்ஸ்’ நெருங்கியுள்ள நிலையில், விஜயை கூட்டணியில் சேர விடாமல், அவரது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும், தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவும் தடுப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
