சென்னை,
செல்வப்பெருந்தகை இன்று சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழன் பிரசன்னாவை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது கூறியதாவது:-
தமிழன் பிரசன்னா வெற்றி பெற்ற உடனே நேராக உங்கள் வீட்டிற்கு வர போகிறார். எட்டாயிரம் ரூபாய் கூப்பன் கொடுக்க போகிறார். தமிழன் பிரசன்னா சட்டமன்ற உறுப்பினராக எட்டாயிரம் ரூபாய் கூப்பனும், இரண்டாயிரம் உரிமை தொகை மாதம் மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாயும்.
அதற்கு பிறகு புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து ஐநூறு, கலைஞர் காப்பீட்டு உரிமை தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம். இது போன்று நிறைய திட்டம் இருக்கிறது சொல்லி கொண்டே போகலாம். எனது அருமை தாய்மார்களே பெரியோர்களே பொங்கல் வந்தது எல்லோரும் மகிழ்ச்சியாக தை பொங்கல் கொண்டாட வேண்டும் என்று மூவாயிரம் மூவாயிரம் ரொக்க பணம் கொடுத்தார்.
கொடுத்தாரா இல்லையா ஒவ்வொரு அட்டைக்கும் மூவாயிரம் அப்புறம் எடப்பாடியும் மோடியும் சேர்ந்து இவர் ஆயிரம் ஆயிரம் உரிமை தொகை கொடுக்கிறார்கள். பெண்கள் ஆண்கள் எல்லாம் ஒரு பக்கம் சாய்ந்து விட்டார்கள். தேர்தல் நேரத்தில் தடை வாங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு வாங்க முயற்சி செய்தார்கள்.
வெள்ளிகிழமை இந்த பேச்சுவார்த்தை நடந்தது யாருக்குமே தெரியாது நீதிதுறை செயலாளர், முதல் அமைச்சர்,தலைமை செயலாளருக்கும் தெரியும். நீங்கள் திங்கட்கிழமை பத்து மணிக்கு தானே கோர்ட்டுக்கு போவிங்க வங்கி மேலாளரை அழைத்து ஒன்பது மணிக்குள் ஐயாயிரம் ரூபாய் செலுத்தினார்கள்.
ஐயாயிரம் ரூபாய் கொடுத்தார் மூவாயிரம் கொடுத்தார் ஐயாயிரம் ரூபாய் முன்று மாதத்தில் கொடுத்தார். தமிழன் பிரசன்னா சட்டமன்ற உறுப்பினராக வந்தவுடன் எட்டாயிரம் ரூபாய் கொடுக்க போகிறார், மேலும் மாதம் மாதம் இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க போகிறார்.
