கெடு முடியும் முன்பே ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா தாக்குதல்: ஒரு நாகரிகமே அழியப்போவதாக டிரம்ப் மிரட்டல்

டெஹ்ரான்: அதிபர் டிரம்ப் விதித்த கெடு முடிவடைவதற்கு முன்னரே, ஈரானில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த பிப்.,28 முதல் நடக்கும் இந்த தாக்குதல் முடிவுக்கு வரவில்லை. போரை நிறுத்துவதற்கு அதிபர் டிரம்ப் விதிக்கும் கெடுவை ஏற்பதற்கு ஈரான் தயாராக இல்லை. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது.

இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்குள் ஈரான் உடன்பாட்டிற்கு வர வேண்டும். இல்லையென்றால் ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படம் என டிரம்ப் எச்சரித்து ருந்தார்.

இந்நிலையில், இந்த கெடு முடிவடைவதற்குள்ளாகவே, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக விளங்கும் கார்க் தீவுகள் மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.

மின் விநியோகம் தடை

இதனிடையே, ஈரானின் காரஜ் பகுதியில் மின் விநியோக தடங்கள் மீது நடந்த தாக்குதல் காரணமாக அங்கு மின்விநியோகம் தடைபட்டுள்ளது.

ஜாஜன் மாகாணத்தில் ஒரு ரயில்வே பாலம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானில் அற்புதம் நிகழலாம்

ஈரானில் ஒரு முழுமையான ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பதாலும், அங்கு மாறுபட்ட அறிவுக்கூர்மை கொண்ட மற்றும் பயங்கரவாத ஆதரவு அற்ற சிந்தனைகள் மேலோங்கி நிற்பதாலும் வேளை புரட்சிகரமான அற்புதம் நிகழலாம் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்றிரவு ஒரு நாகரிகமே அழியப்போகிறது. அது மீண்டும் ஒரு போதும் உயிர்பெறாது. அது நிகழ நான் விரும்பவில்லை என்றாலும், அநேகமாக அதுவே நடக்கும். இருப்பினும், இப்போது ஒரு முழுமையான ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பதாலும், அங்கு மாறுபட்ட அறிவுக்கூர்மை கொண்ட மற்றும் பயங்கரவாத ஆதரவு அற்ற சிந்தனைகள் மேலோங்கி நிற்பதாலும் வேளை புரட்சிகரமான அற்புதம் நிகழலாம். உலகின் நீண்டமற்றும் சிக்கலான வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றான இன்றிரவே அதற்கான விடையை நாம் அறிந்து கொள்வோம். 47 ஆண்டுகால மிரட்டல் ஊழல் மற்றும் மரணங்கள் ஆகியன இன்று இரவோடு முடிவுக்கு வரும். ஈரானின் மகத்தான மக்களுக்கு இறைவன் அருள் புரிவார். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Source link