திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று (பிப்ரவரி 21) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 8,97,211 பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது. அதில் 8,97,211 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 அக்டோபரில் 2.78 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, தற்போது 2,69,53,644 ஆகக் குறைந்துள்ளது.
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள விபரங்கள்:
சுமார் 8,97,211 பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் பெயர்கள் இதில் அடங்கும்.
கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலுக்குப் பிறகு, சுமார் 15,11,292 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் புள்ளிவிவரங்கள்:
பெண் வாக்காளர்கள்: 1,38,27,319
ஆண் வாக்காளர்கள்: 1,31,26,048
திருநங்கைகள்: 277
இளம் வாக்காளர்கள் (18-19 வயது): 4,24,518
வெளிநாடு வாழ் வாக்காளர்கள் (என்ஆர்ஐ): 2,23,558
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
