திருவனந்தபுரம்: கேரளா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் மாணவி ஒருவடன் இணைந்து களறி பயிற்சியில் ஈடுபட்டார்.
கேரளா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கொல்லத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் , பிறகு குட்டிக்கானம் பகுதியில் உள்ள மரியம் கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது ஆசிரியர்கள், தற்காப்பு கலை படித்த மாணவர்கள் அதனை செய்து காட்ட முடியுமா. அதனை பார்க்க ராகுல் ஆர்வமாக உள்ளார் எனக்கூறினர்.
இதனையடுத்து அந்த கல்லூரியில் படிக்கும் தினாஸ்ரீ என்ற மாணவி கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களறியை செய்து காட்டினார்.
தொடரந்து அந்த மாணவி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் செய்தை போல் ராகுலும் செய்து காட்டினார்.
இதுகுறித் தினாஸ்ரீ கூறியதாவது: ராகுல் வந்ததும், அவரிடம் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. தற்காப்புக் கலைகள் குறித்து கேட்டேன். அதற்கு அவர் விரும்பினார். ராகுலும் சிறப்பாக செய்தார். அவர் தனமும் யோகா செய்து வருவதை அறிந்து கொண்டேன் என்றார்.
ராகுல் மற்றும் மாணவியுடன் இணைந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் மற்றும் தியான் குரியகோஸ் ஆகியோரும் களறி பயிற்சியில் ஈடுபட முயன்றனர். ஆனால், அவர்களால் முடியவில்லை.
