கேரளாவில் மார்க்சிஸ்ட் – பாஜக ரகசிய கூட்டணி வெற்றி பெறாது: காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் விமர்சனம்

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஒரு​வருக்​கொரு​வர் உதவிக்​கொள்ள சிபிஐ(எம்) மற்​றும் பாஜக வேட்​பாளர் பட்​டியலிலேயே ஒப்​பந்​தம் செய்​து​கொண்​டுள்​ளனர். அவர்​களது சொந்​தக் கட்​சித் தொண்டர்களே இந்த ஒப்​பந்​தத்தை நிராகரிப்​பார்​கள் என்​ப​தில் நான் உறு​தி​யாக இருக்​கிறேன்.

ஏற்​கெனவே இப்​படி முயன்று அவர்​கள் அம்​பலப்​பட்​டார்​கள். இப்​போதும் அதேநிலை​தான் ஏற்படும். இந்த ரகசிய கூட்​டணி வெற்றி பெறாது. தற்​போதைய அரசின் குறை​களைச் சுட்​டிக்​காட்​டு​வதோடு, யுடிஎஃப் ஆட்​சி​யின் திட்​டங்​களை​யும் முன்​வைத்து வரு​கிறோம்.

கேரளா​வுக்​கான குறிப்​பிட்ட திட்​டங்​கள் அடங்​கிய விரி​வான தேர்தல் அறிக்கை விரை​வில் வெளி​யிடப்​படும். கேரளா​வில் காங்கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (யுடிஎஃப்) ஆட்​சிக்கு வந்​தால், பெண்​கள் அரசுப் பேருந்​துகளில் இலவச​மாகப் பயணம் செய்​ய​லாம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

Source link