கேரளாவில் 2,500 பதட்டமான வாக்குச்சாவடிகள்- இறங்கிய 76,000 போலீஸ்..!

கேரளாவில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற சூழலில் இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

கேரளாவில் நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 140 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 30,471 வாக்கு சாவடிகளுக்கு வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் 2,500 பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக கேரள மாநிலம் முழுவதும் 76,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டமன்ற தேர்தலில் 985 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 71 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

இடுக்கி, வயநாடு போன்ற மலைப்பாங்கான இடங்களுக்கெல்லாம் ஜீப் மூலமாக வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. நாளை வாக்குப்பதிவு என்பதால் வாக்குப்பதிவுக்கான அனைத்து பணிகளும் தற்போது தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் சுமுகமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து ஆயத்தப் பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.

Source link