ஏப்ரல் 15-ல் நாகர்கோவில் வருகிறார் பிரதமர் மோடி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 15-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
முதலில் ஈத்தங்காடு பகுதியில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்தத் திட்டம் மாற்றப்பட்டு,நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் தொடங்கி, வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை இந்த ரோடு ஷோ நடைபெற உள்ளது
பிரதமரின் வருகையையொட்டி நாகர்கோவில் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்டாலின் தலைமையில், காவல்துறை அதிகாரிகள் வேப்பமூடு முதல் வடசேரி வரையிலான சாலையை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
-
Apr 09, 2026 07:32 IST
திருவனந்தபுரத்தில் அமைச்சர் வி.சிவன்குட்டி, நடிகர் மோகன்லால் நேரில் வந்து வாக்களிப்பு
கேரள சட்டமன்றத் தேர்தல் 2026 | திருவனந்தபுரம் முடவன்முகலில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக அமைச்சர் மற்றும் நேமம் தொகுதி எல்டிஎப் (LDF) வேட்பாளர் வி. சிவன்குட்டி மற்றும் பிரபல நடிகர் மோகன்லால் ஆகியோர் வருகை தந்தனர்.
Video: ANI
#WATCH | Keralam Elections 2026 | Minister and LDF candidate from Nemom, V Sivankutty, and actor Mohanlal arrive at a polling station in Mudavanmugal, Thiruvananthapuram to cast a vote. pic.twitter.com/GfO392q3LF
— ANI (@ANI) April 9, 2026
-
Apr 09, 2026 07:31 IST
ஒவ்வொரு வாக்கும் புதுச்சேரியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்- பிரதமர் மோடி ட்வீட்
“புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து தங்களது வாக்கினைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, நமது இளைஞர்களும், பெண் வாக்காளர்களும் இந்த ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் ஒவ்வொரு வாக்கிற்கும் முக்கியத்துவம் உண்டு.”
— பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் வேண்டுகோள்
-
Apr 09, 2026 07:30 IST
காலை முதலே வாக்குச்சாவடிகளில் குவியும் மக்கள்
அசாம் சட்டமன்றத் தேர்தல் 2026 | ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
Video: ANI
#WATCH | Assam Elections 2026 | Voters form long queues to cast their vote at a polling station in Jalukbari assembly constituency. pic.twitter.com/eXOv28vAMu
— ANI (@ANI) April 9, 2026
-
Apr 09, 2026 07:27 IST
கேரளா, அசாம், புதுச்சேரி: 296 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 296 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஜனநாயகத் திருவிழா மாலை 6 மணி வரை நீடிக்கிறது. பாதுகாப்புப் பணிகளுக்காகத் துணை ராணுவப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் மற்ற மாநிலங்களுடன் சேர்த்து மே மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளன.
Video: ANI
கேரளாவின் குருவாயூர் தெற்குப் பகுதியில் உள்ள குருவாயூர் தேவஸ்வம் ஆங்கில வழிப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 137-ல், மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி இன்று நேரில் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
#WATCH | Keralam Assembly Elections 2026 | Union Minister Suressh Gopi casts his vote at Guruvayur Devaswom English Medium School in Guruvayur South Part booth number 137. pic.twitter.com/MSe9Zy6yfO
— ANI (@ANI) April 9, 2026
-
Apr 09, 2026 07:26 IST
இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு இன்றே இறுதி நாளாகும். தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 5,024 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு காரணங்களால் 2,470 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்தவுடன், இன்று மாலை 3 மணி அளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
