ஆளும் இடதுசாரி அரசுக்கு எதிராக சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்தை முன்வைத்து, அதில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிற இடதுசாரி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது போல் ஏஐ வீடியோக்களை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி, உம்மன் சாண்டி போன்ற மறைந்த மூத்த தலைவர்களின் உருவங்களைப் பயன்படுத்தி பிரச்சார வீடியோக்களை உருவாக்கி வருகிறது.
காங்கிரஸும் பாஜகவும் ஏஐ தொழில்நுட்பத்தை தீவிரமாகப் பயன்படுத்தினாலும், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி இதில் சற்று நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறது. கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபாலின் சமூக ஊடக மேலாளர் நிருபன் தாஸ் கூறுகையில், “நாங்கள் போஸ்டர்கள் உருவாக்கவும், அரசின் நலத் திட்டங்களை விளக்கவும் மட்டுமே ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தினோம்,” என்றார்.
அதேநேரத்தில், இந்த ஏஐ தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து வாக்காளர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷாஜி என்பவர், ‘தேர்தல் பிரச்சார ஏஐ வீடியோக்களை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கிறோம்’’ எ்ன்றார்.
