கேரள தேர்தல் பிரச்சாரத்தில் சுவர் விளம்பரம் எழுதும் ரோபோக்கள்

திருவனந்தபுரம்: கேரள தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் மாநிலம் முழு​வதும் சுவர் விளம்​பரம் தீவிரமடைந்​திருக்​கிறது. இதற்​காக ரோபோக்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

கேரளா​வில் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. இந்த தொகு​தி​களுக்கு ஒரே கட்​ட​மாக ஏப்​ரல் 9-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி இடையே கடும் போட்டி நில​வு​கிறது.

மூன்று அணி​கள் சார்​பிலும் அதிதீ​விர பிரச்​சா​ரம் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. குறிப்​பாக திரு​வனந்​த​புரம், கொச்சி உள்​ளிட்ட பகு​தி​களில் சுவர் விளம்​பரம் தீவிரமடைந்​திருக்​கிறது. இதற்​காக ரோபோக்​கள் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

Source link