2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் 14-ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 210 ரன்களை விளாசியது.
211 ரன்களை துரத்திய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
52 பந்துகளை எதிர்கொண்ட கே.எல். ராகுல் 11 பவுண்டரிகள், 4 சிக்சர்களை சேர்த்து 92 ரன்களை குவித்து முகமது சிராஜ் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் 29 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார்.
அரைசதம் கடந்ததும் கே.எல். ராகுல் கொண்டாட்ட செய்கை காண்பிக்க, அவரது மனைவி அதியா ஷெட்டி ஸ்டான்ட்ஸ்-இல் இருந்தபடி எழுந்து நின்று கைத்தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
போட்டியை பொருத்தவரை டெல்லி அணி கடைசி பந்து வரை போராடியும் தோல்வியை தழுவியது.
டெல்லி அணிக்கு கே.எல். ராகுலுக்கு அடுத்தப்படியாக டேவிட் மில்லர் தனி ஆளாக நின்று ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
இக்கட்டான கடைசிகட்ட ஓவர்களில் மில்லர் 20 பந்துகளில் 41 ரன்களை விளாசியது டெல்லி அணி வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியது.
எனினும், போட்டியின் கடைசி பந்தில் ரன் குவிக்க முடியாமல் போனது குஜராத் அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது.
