கே.துரை, 28 சுயதொழில், திண்டுக்கல் திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் மட்டும் தான் உள்ளது. காமராஜருக்கு பின்

கே.துரை, 28 சுயதொழில், திண்டுக்கல்

திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் மட்டும் தான் உள்ளது. காமராஜருக்கு பின் நீர், நிலம் பாதுகாப்பு, பசுமை, கூட்டுக்குடிநீர் என புரட்சி ஏற்படுத்தியதாக எந்த திட்டங்களும் இல்லை. இலவசங்கள் மக்களை ஏமாற்றும் வித்தை. அதை இரண்டு திராவிட கட்சிகளுமே மிகச்சரியாக பயன்படுத்துகின்றன. அந்த வரிசையில் இருந்து மாறுபட்டு நிற்கும் நாம் தமிழர் கட்சி வரவேற்புக்குரியது.

புது வரவான த.வெ.க.,வுக்கு இளைஞர், இளம்பெண்கள் ஆதரவு உள்ளது. அந்த கட்சியுமே திராவிட கட்சிகளின் இருண்ட பார்முலாவையே கையில் எடுத்து தேர்தல் அறிக்கை கொடுத்துள்ளது.

அனுபவமின்மை, அரசியல் பழகுதல், வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என விஜயிடம் நிறைய மைனஸ்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் சரிசெய்ய கூடிய பயிற்சி களமாக, இந்த தேர்தல் அவருக்கு அமையும். அவரிடம் இருக்கும் தவறுகளை, குறைகளை சரிசெய்து, நோக்கத்திலும் திட்டத்திலும் தெளிவை முன்வைத்தால், அவர் சரியான மாற்று அரசியல்வாதியாக இருப்பார்.

கண்ணை மூடிக்கொண்டு ஒருவரை ஆதரிக்காமல், இந்த முறை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தே ஓட்டு போடுவேன்.

Source link