கையிருப்பு ரூ.50,000, குறைந்த வருவாய் – உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு என்ன?

அதேபோல், தனது பெயரில் ரூ.1 கோடி மதிப்பிலான டிபென்டர் கார், ரூ.23 லட்சம் மதிப்புடைய இன்னோவா கார் இருப்பதாகவும், தங்கம், வெள்ளி, வைர நகைகள் ஏதுமில்லை என்றும், மனைவி கிருத்திகாவிடம் 1,600 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக, அசையும் சொத்துகளாக உதயநிதியிடம் ரூ.12.92 கோடியும், அவரது மனைவியிடம் ரூ.13.25 கோடியும், மகளிடம் ரூ.2.56 லட்சமும் உள்ளன.

இதுதவிர, உதயநிதி பெயரில் ரூ.7.72 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. அவரது மனைவி கிருத்திகா உதயநிதி பெயரில் அசையா சொத்துகள் இல்லை. மொத்தமாக உதயநிதி பெயரில் மட்டும் ரூ.20.64 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் உள்ளன. மேலும், அவர் பெயரில் தற்போது 10 குற்றவியல் வழக்குள் நிலுவையில் இருக்கின்றன.

Source link