கொச்சி விமான நிலையத்தில் துவங்குகிறது நாட்டின் முதல் 'ஹைட்ரஜன்' பஸ் சேவை

கொச்சி: கொச்சி சர்வதேச விமான நிலையம் நாட்டிலேயே முதன்முறையாக, பயணியர் போக்குவரத்திற்காக ஹைட்ரஜன் எரிவாயு பயன்படுத்தி இயங்கும் பஸ்களை அறிமுகப் படுத்த உள்ளது.

மத்திய அரசின் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துடன் இணைந்து, ஹை ட்ரஜன் பள்ளத்தாக்கு திட்டத்தை கேரள அரசு துவங்கி உள்ளது. இத ற்காக, ‘ஹைட்ரஜன் வேலி இன்னோவேஷன் கிளஸ்டர்’ எனப்படும் எச்.வி.ஐ.சி., என்ற நிறுவனத்தையும் உருவாக் கி உள்ளது.

இந்நிறுவனம் சமீபத்தில், கொச்சி சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து, ஹைட்ரஜன் பஸ்களை இயக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம், நாட்டின் முதல் ஹைட்ரஜன் பஸ் சேவை கொச்சி விமான நிலையத்தில் அறிமுகமாக உள்ளது. இந்த பஸ்களை வாங்குவதற்கான நிதியுதவியை மாநில அரசின் எச்.வி.ஐ.சி., நிறுவனம் வழங்கும்.

இதற்காக ஒரு பேருந்துக்கு 2.90 கோடி ரூபாய் வரை அனுமதி வழங்கியுள்ளனர். திட்டத்தின் மொத்த மதிப்பு 8.70 கோடி ரூபாய். ஓராண்டுக்குள் இந்த பஸ்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

அதன் பின், அதன் இயக்க மற்றும் நிர்வாக செலவு, வழித்தடம் ஆகியவற்றை விமான நிலைய நிறுவனம் முடிவு செய்யும். தடையற்ற ஹைட்ரஜன் எரிபொருள் வினியோகத்திற்காக பாரத் பெட்ரோலியம் மற்றும் கொச்சி சர்வதேச விமான நிலைய நிறுவனம் இணைந்து, பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக்க உள்ளது.

ஹைட்ரஜன் பஸ்களால் என்ன பயன்?

தண்ணீரில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வேதியியல் மூலப்பொருட்கள் பிணைந்து உள்ளன. அதில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்து எடுத்து, பஸ் போன்றவற்றுக்கு எரிபொருளாக பயன்படுத்துவர். ஐரோப்பிய நாடான ஜெர்மன் உட்பட பல வெளிநாடுகளில் இந்த வகை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மிக முக்கிய பயன், இது நீராவியை மட்டுமே வெளியிடும். இதனால், சுற்றுச்சூழல் மாசு பெருமளவு குறையும். தற்போது இந்த தொழில்நுட்பத்திற்கான செலவு அதிகமாக உள்ளதால், பயன்பாடு குறைவாக உள்ளது. தொடர் ஆய்வுகள் மூலம் தொழில்நுட்ப செலவு குறையும் போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளை சார்ந்திருப்பது குறையும். அன்னிய செலாவணி மிச்சமாகி பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும்.

Source link