கொடூர குற்ற வழக்குகளில் சிறார்களை வயது வந்தோராக கருதி விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், கடந்த 2022-ம் ஆண்டு மற்றொரு சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்தான். இந்த வழக்கை விசாரித்த பாட்னா ஐகோர்ட்டு, ‘கொடூர குற்றச் செயலில் ஈடுபட்டதால், சிறார் என கருதாமல், வயது வந்தோராக கருதி விசாரணை நடத்தலாம்’ என, சிறார் நீதி வாரியத்திற்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சிறுவன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:-

இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302-ன் கீழ் தொடரப்படும் கொலை வழக்குகள் அனைத்தும், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் கொடூர குற்றம் என்ற பிரிவிலேயே வரும். எனவே, கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களை வயது வந்தோராக கருதி சிறார் நீதி வாரியங்கள் விசாரணை நடத்தலாம்.

அதே சமயம்,குற்றஞ் சாட்டப்பட்ட சிறுவனின் மனநிலை, உடல்நிலை, குற்றத்தின் தன்மை, அதனால் ஏற்படும் விளைவுகளை புரிந்து கொள்ளும் திறன், குற்றம் நடந்த சூழல் ஆகியவற்றை சிறார் நீதி வாரியங்கள் கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும். உளவியலாளர்களின் இயந்திரத்தனமாக ஏற்க அறிக்கைகளை மட்டும் கூடாது. பிற ஆதாரங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link