கொல்கட்டா: பிரிமியர் தொடருக்காக கொல்கட்டா அணியில் இணைந்தார் முசரபானி.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான். பிரிமியர் தொடரில் கொல்கட்டா அணிக்காக ரூ. 9.20 கோடிக்கு ஒப்பந்தம் ஆனார். ஆனால் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை நிலவியதால், இந்திய கிரிக்கெட் போர்டு ‘அட்வைஸ்’ படி, முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.
தற்போது இவருக்குப் பதில் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் முசரபானி 29, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், 14 விக்கெட் சாய்த்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு கைகொடுத்தார்.
