கொல்கட்டா: தமிழகத்தோடு புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள்

கொல்கட்டா: தமிழகத்தோடு புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடைபெறுகின்றன. கடந்த, 14 ஆண்டுகளுக்கும் மேலாக, மேற்கு வங்க முதல்வராக பதவியில் உள்ளார், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி.

இந்த முறை நிச்சயம், பா.ஜ., தேர்தலில் வெற்றி பெற்று, மம்தாவை வெளியேற்றும் என்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்புகிறார்.

இதனால் தமிழகத்தை விட மேற்கு வங்கத்தில் பா.ஜ., அதிக கவனம் செலுத்துகிறது. கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் மாநில தேர்தல்கள் இம்மாதம் 9ம் தேதி முடிந்துவிடும். அதன் பின் மேற்கு வங்கத்தில் இரண்டு வாரம் தங்கி, தேர்தல் வேலைகளை கவனிக்கப் போகிறாராம் அமித் ஷா.

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் பிரச்சார கூட்டங்கள், ரோடு ஷோ ஆகியவற்றிற்கு தேதிகளை பா.ஜ., முடிவு செய்து வருகிறது. மத்திய அமைச்சர்கள் பலர் இங்கு பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டு உள்ளனர்.

மேற்கு வங்கத்தை ஒன்பது பிரிவுகளாக பா.ஜ., பிரித்துள்ளது. ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மூத்த தலைவர்கள் தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங், நித்யானந்த் ராய், நிஷிகாந்த் ராய் ஆகியோருடன், உ.பி., பீஹார், சத்தீஸ்கர், திரிபுரா மாநிலங்களிலிருந்தும், பா.ஜ., தலைவர்கள் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு உள்ளனர். ‘பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீன், மட்டன், முட்டை ஆகியவை தடை செய்துவிடுவர்; உங்களால் சாப்பிட முடியாது’ என்று, சகட்டு மேனிக்கு பிரச்சாரம் செய்து வருகிறார், மம்தா.

‘அடுத்த பா.ஜ., முதல்வர் அசைவ உணவு பிரியர்’ என்று பா.ஜ., தரப்பில் பதில் பிரச்சாரமும் செய்யப்படுகிறது.

இதற்கிடையே, தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வேறு, மம்தா அரசை கடுமையாக கண்டனம் செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் நியமித்த அதிகாரிகளை, மம்தா கட்சியினர் சிறைபிடித்தனர். இதை கண்டித்த உச்ச நீதிமன்றம், இதை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, மம்தாவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமி த் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?

Source link