“கொல குத்து தான்…” – எஸ்.ஜே.சூர்யா செம்ம ஹாப்பி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று(10.04.2026) திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் வரவேற்பு தொடர்பாக எஸ்.ஜே.சூர்யா பதிட்டுள்ளார். அந்த பதிவில், “தியேட்டரில் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். செம்ம ஹாப்பி. கோடை விடுமுறைக்கும் இப்படி ஒரு ட்ரெண்டி படமும் ஒன்னா சிக்கியிருக்கு. கொல குத்து தான். விக்னேஷ் சிவன் இப்போது டாப் போட்டியில் இணைந்துவிட்டார். அதற்கு சான்று அவரது பெயர் வரும் போது எழுந்த வரவேற்பு. உங்கள் வெற்றிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 

பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, கௌரி ஜி கிஷன், யோகி பாபு, சீமான் அண்ணன், தயாரிப்பாளர் லலித், நயன்தாரா மற்றும் அனிருத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Source link