கோட்டையை தக்க வைக்குமா அதிமுக? – உடுமலை தொகுதியில் வெற்றியை எதிர்பார்க்கும் திமுக

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்று உடுமலைப்பேட்டை. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இத்தொகுதி, விவசாயமும், தென்னை நார் தொழிற்சாலைகளும் நிறைந்த ஒரு செழிப்பான பகுதி.

1951-ல் உருவாக்கப்பட்ட இத்தொகுதி, பல அரசியல் மாற்றங்களைக் கண்டிருந்தாலும், கடந்த சில தேர்தல்களில் அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

தொகுதி ஒரு பார்வை

சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் படி, இத்தொகுதியில் சுமார் 2,30,976 வாக்காளர்கள் உள்ளனர். கொங்கு வேளாள கவுண்டர்கள் பரவலாக உள்ள உடுமலை தொகுதியில், பட்டியலின மக்கள், நாயக்கர், செட்டியார் மற்றும் தேவர் உள்ளிட்ட பிற்பட்ட சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர். தெலுங்கு பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

Source link