கோலாலம்பூர்: மலேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா -மலேசியா இடையே நட்பு மற்றும் உறவுகள் வலுவடைந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அழைப்பை ஏற்று, இரு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று அந்நாட்டிற்கு சென்றார். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 08) புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ராவில் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது பிரதமர் மோடியை மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம், அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். பிரதமர் மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு மற்றும் மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்து, ”நம்பிக்கை, நட்பு மற்றும் உறவை, இந்தியாவும் மலேசியாவும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
