கோல்கட்டா: டி -20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி பைனலுக்கு தகுதி பெற்றது.
இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்க அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்தது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். துவக்க வீரர்களான கேப்டன் மார்க்ரம் 18, குயின்டர் டி காக் 10,, ரியான் ரிக்கல்டன் 0, டேவிட் மில்லர் 6 ரன்னுக்கு அவுட்டாகினர்.
பிரேவிஸ், 34, ஸ்டப்ஸ் 29 ரன் எடுத்தனர். மார்கோ ஜான்சன் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். போஸ்ச் 2, ரபாடா 2 ரன்னில் அவுட் ஆனார்கள்.தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.நியூசிலாந்து அணியின் ஹென்றி, மெக்கோன்ஹில், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 170 ரன் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.அந்த அணி துவக்க வீரர்களாக டிம் செய்பெர்ட், பின் ஆலன் ஆகியோர் அதிரடி காட்டினர். பின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்து கடைசி வரை அவுட் ஆகமல் இருந்தார், டிம் செய்பெர்ட் 58 ரன்னில் அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திரா 13 ரன் எடுத்தார்.நியூசிலாந்து அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை( மார்ச் 05) நடக்கும் 2வது அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி வரும் 8 ம் தேதி ஆமதாபாத் மைதானத்தில் நடக்கும் பைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.
