கோல்ப்: அதித்தி 3வது இடம்

ஹாய்னன்: சீன கோல்ப் தொடரில் இந்தியாவின் அதித்தி மூன்றாவது இடம் பிடித்தார்.

சீனாவில் எல்.பி.ஜி.ஏ., புளூ பே கோல்ப் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் அதித்தி அசோக் பங்கேற்றார். முதல் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட அதித்தி (68 ‘ஸ்டிரோக்’), அடுத்த இரு சுற்றில் 70, 70 ‘ஸ்டிரோக்’ பெற்றார். கடைசி, 4வது சுற்றில் 72 ஸ்டிரோக் பெற்றார். முடிவில் அதித்தி 280 ஸ்டிரோக்குடன், மூன்றாவது இடத்தை அமெரிக்காவின் கிம் ஆஸ்டனுன் (280) பகிர்ந்து கொண்டார்.

தென் கொரியாவின் மி ஹயாங் லீ (277), சீனாவின் வெய்வெய் ஜங் (278) முதல் இரு இடம் பெற்றனர்.

Source link