இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், இந்தியா முழுவதும் கடலை மிட்டாய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கோவில்பட்டியில் குடிசை தொழிலாகவும், கடைகளாகவும் சுமார் 120 இடங்களில் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்.30-ம் தேதி புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. புவிசார் குறியீடு பெற்ற பின்னர் லண்டன், அமெரிக்கா, பஹ்ரைன், கத்தார், சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஏற்றுமதி தடைபட்டது
இந்நிலையில் ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தொடங்கிய பின்னர், கத்தார், குவைத், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளுக்கு கடலைமிட்டாய் ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டுவிட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே கடலைமிட்டாயின் மூலப்பொருளான நிலக்கடலை வரத்து குறைத்து விலை கடுமையாக உயர்ந்தது.
