கோவில்பட்டி: ”நான் தான் படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை தருகிறேன் என்று சொல்கிறேன். எப்படி தருகிறேன் என்று சொல்கிறேன் ” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கோவில்பட்டியில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: டோக்கனும் 8 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்பதை நம்புகிறாய். அவன் 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்பதை நம்புகிறாய். பிரிட்ஜ் தருகிறேன் என்பதை நம்புகிறாய். தாலிக்கு ஒரு பவுன் தங்கம் தருகிறேன் என்பதை நம்புகிறாய். 2 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்பதை நம்புகிறாய். 2500 ரூபாய் தருகிறேன் என்பதை நம்புகிறாய்.
நான் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருகிறேன் என்று சொல்வதை நம்பு, ஒவ்வொரு குடும்ப பெண்ணுக்கும் ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என்பதை நம்பு, அப்பொழுது சிரிப்பு வருகிறது. ஏன் சிரிக்கிறாய்? ஏன்? கேவலமாக இருக்கிறதா? நான் தான் படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை தருகிறேன் என்று சொல்கிறேன். எப்படி தருகிறேன் என்று சொல்கிறேன்.
அப்பொழுது நீ நம்புவதில்லை. உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும் எப்படி ஆட்சி நடக்கிறது. எப்படி பொருளாதாரத்தை மீட்டு எடுக்கிறான் என்று சொல்கிறேன். உன் பிள்ளை சொல்கிறேன், நீ நம்புவதில்லை, வந்தவன், போனவனை நம்புகிறாய். உன் வயற்றில் இருந்து வந்தவனை நம்புவதில்லை அங்கே தான் பிரச்னை. இவ்வாறு சீமான் பேசினார்.
