கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை – இறப்பதற்கு முன்பு செய்த `செயல்!'

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை ஆகிய 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேடு, தம்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணமானது.

தற்கொலை செய்த குடும்பத்தினர்
தற்கொலை செய்த குடும்பத்தினர்

இலக்கிய செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு எக்ஷிதா ஏஞ்சல் என்கிற பெண் குழந்தை இருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர்களது வீட்டில் 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அருகில் உள்ள பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்
புற்றுநோய்

முதல் கட்ட விசாரணையில் இலக்கியா கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்தும் குணமாகாத வருத்தத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர்.

இறப்பதற்கு முன்பு கமலேஷ் பதிவு செய்த வீடியோவில், “என் மனைவி மார்பக புற்றுநோயால் நோயால் பாதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் எங்களுக்கு என்ன செய்தென்று தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்கிறோம். நாங்கள் இறந்த பிறகு எங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கமலேஷ்
கமலேஷ்

இதற்கான செலவுத் தொகையான ரூ.50,000 ஏற்கனவே ஆலயத்திற்கு அனுப்பிவிட்டோம். என்னுடைய சேமிப்புப் பணத்தையும் ஆலயத்திற்கு எழுதிவிட்டேன். பணியில் இறந்ததால் கிடைக்கும் பணத்தை தமிழ்நாடு ஏழை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

Source link