கோவை: சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் நடிகர் ராம் சரண் சாமி தரிசனம்

கோவை,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம் சரண். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பெத்தி. இப்படத்திற்கான சண்டை காட்சியில் நடித்தபோது ராம் சரணின் கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராம்சரணுக்கு நேற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

அய்யப்பன் கோவிலில் தரிசனம்

இந்நிலையில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் நடிகர் ராம்சரண் இன்று கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ராம்சரணுடன் அவரது மனைவி உபாசனாவும் அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

Source link