கோவை: தமிழக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட புதிய தமிழகம் கட்சி திட்டமிட்டு வருகிறது.சட்டசபை தேர்தல்

கோவை: தமிழக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட புதிய தமிழகம் கட்சி திட்டமிட்டு வருகிறது.

சட்டசபை தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. திமுக மற்றும் அதிமுகவில் தொகுதி பங்கீடு முடிந்து தலைவர்கள் பிரசாரத்திற்கு கிளம்பிவிட்டனர்.

கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி முதலில் அதிமுக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், அது நீடிக்கவில்லை. அதிமுகவில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், கோவையில் கிருஷ்ணசாமி கூறியதாவது: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பணியாற்றி வருகிறோம்.தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ராமநாதபுரம், மதுரை தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை ஊரக மற்றும் புறநகர் பகுதிகளில் வலிமையாக உள்ளோம்.

தங்களது பலத்திற்கு ஏற்ப அதிக தொகுதிகளில் போட்டியிட கட்சிகள் விரும்பும்.சட்டசபையில் குரல் ஒலிக்க வேண்டும் என விரும்புகிறோம். தமிழகத்தில் அதிகாரம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என விரும்புகிறோம்.

திமுகவின் தவறான ஆட்சிக்கு எதிராக பேசி உள்ளோம். போராட்டம், பேரணி நடத்தி உள்ளோம். அதிமுக மற்றும் தேஜ கூட்டணி கட்சிகளுடன் பேசினோம். எங்கள் கட்சி வலிமையாக இருக்கும் மாவட்டங்களில் தொகுதிகளை கேட்டோம். 2 முதல் 3 சுற்று பேச்சு நடத்தினோம். ஆனால், குறைந்த தொகுதிகளை அளிக்க முன்வந்தனர்.நாங்கள் மரியாதைக்குரிய வகையில் 7 முதல் 9 வரை எதிர்பார்த்தோம். இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தடைபட்டது. எனினும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும்.

தொண்டர்களை தயார்படுத்தி வருகிறோம். தொண்டர்களிடம் இருந்து வேட்பு மனு பெற்று வருகிறோம். 2 நாளில் முடிந்துள்ளோம். இதனைத் தொடர்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link