கோவை: 'தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஜாதி வெறி, மத வெறி அமைப்புகளின் தேர்தல் பணியால், தமிழகத்தில்

கோவை: ‘தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஜாதி வெறி, மத வெறி அமைப்புகளின் தேர்தல் பணியால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது,’ என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை: கோவையில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறையில் உள்ள முஸ்லிம்களுக்கு ஆதரவாக சட்ட விரோதமாக நிதி திரட்டி, மோசடி செய்த வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜவாஹிருல்லா. அவரது கட்சிக்கு இரண்டு இடத்தை தி.மு.க., ஒதுக்கி இருக்கிறது.

பட்டியலின மக்களை மதமாற்றம் செய்ய முயன்ற முஸ்லிம்களை தட்டி கேட்ட, பா.ம.க., பிரமுகர் திருபுவனம் ராமலிங்கத்தை படுகொலை செய்த வழக்கில் தொடர்புடைய எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கு தி.மு.க., கூட்டணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

‘ரத யாத்திரை நடத்தக்கூடாது’ என அராஜகம் செய்த தமிமுன் அன்சாரியின் முஸ்லிம் அமைப்பு உட்பட ஏழு முஸ்லிம் அமைப்புகளுடன், தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. இது தவிர, இந்திய கிறிஸ்துவ முன்னணி, தென்னிந்திய திருச்சபை, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்துவ அமைப்புகளுடன் இணைந்து தி.மு.க., செயல்படுகிறது.

மேலும், 16க்கும் மேற்பட்ட, பட்டியலின மக்களுக்கு எதிரான ஜாதி வெறி அமைப்புக்களுடனும் கூட்டணி அமைத்து தி.மு.க., இந்த தேர்தலை சந்திக்கிறது. எனவே, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ள மதம் மற்றும் ஜாதி ரீதியான அமைப்புகளை தேர்தல் கமிஷன் கண்காணிக்க வேண்டும். தி.மு.க., கூட்டணியினர், ஜாதி ரீதியான பிளவு ஏற்படுத்தும் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். தவறினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link