கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., -பா.ஜ., – அ.ம.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி

கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., -பா.ஜ., – அ.ம.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீடு இறுதியானது.

பா.ஜ., தரப்பில், மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. அவர், கோவையில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இதுதொடர்பாக விசாரித்தபோது, சொந்த காரணங்களால் சென்னை செல்லவில்லை என தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டால், தனக்கு சாதகமாக இருக்கும் என ஆதரவாளர்களிடம் ஆலோசித்து வந்தார். இச்சூழலில், தொகுதி பங்கீடு கூட்டத்தில் அவர் பங்கேற்கச் செல்லாமல் தவிர்த்தது, அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.

Source link