கோவை: நம்பிக்கை வேணும்; மக்களை நம்பாதவர் தான் 2 தொகுதியில் போட்டியிடுவார் என விஜயை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.
கோவையில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: தன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவர் தான் இரண்டு தொகுதியில் போய் போட்டியிடுவார். ஆனால் வசனம் பேசுவது, நான் உச்சம் என சொல்வது. என்ன உச்சம்? பெரிய ஹீரோ என்றால் தனித்து ஒரே தொகுதியில் நிற்க வேண்டும்.
நம்பிக்கை வேணும். நம்பிக்கையுடன் இருங்கள், நாம் வெல்வோம் என சொல்வது? உனக்கே நம்பிக்கை இல்லை. எதுக்கு இரண்டு தொகுதியில் போய் நிற்கிறாய். நான் இரண்டு நின்று தோல்வி அடைந்து இருக்கிறேன். ஆனாலும் 3வது தனித்து நிற்கிறேன். கட்சியில் இரண்டு தொகுதியில் நிற்க சொன்னார்கள். ஆனால் எனது கோட்பாடுபடி ஒருவன் ஒரு பதவியில் இருந்து இன்னொரு பதவிக்கு போட்டி போடுவது ஜனநாயக துரோகம்.
மக்கள் விரோதம். ஒருவன் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதியில் போட்டி போடுவது மக்கள் விரோதம். இது எங்கள் கொள்கை. வரலாற்றில் எங்கள் அளவுக்கு யாரும் தோற்க முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தோம். யார் கிட்ட? இன்னைக்கு வீழ்த்துவான், திட்டுவான், ஒருநாள் இந்த பிள்ளைகளை கொண்டாடுகிற காலமும் வரும். இவ்வாறு சீமான் பேசினார்.
