தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக நவம்பர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.55க்கு சென்னை சென்ட்ரல் – போத்தனூர் (கோவை) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அடுத்த நாள் காலை அதவாது தீபாவளி நாளான நவம்பர் 7ம் தேதி வெள்ளிக்கிழமை 9.15 மணிக்கு கோவை போத்தனூர் சென்றடையும்.
இதேபோல் கோவை போத்தனூர் – சென்னை சென்ட்ரல் இடையே நவம்பர் 9ம் தேதி ஞாயிறு இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நவ.10ம் தேதி திங்கட்கிழமை காலை 9.35க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
தாம்பரத்தில் இருந்து நவம்பர் 6ம் தேதி இரவு 11.55க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள்(நவ.7) பிற்பகல் 3.30க்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நவ.9ம் தேதி திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் செவ்வாய் கிழமை காலை 11.30க்கு தாம்பரம் வந்தடையும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலும், ஏற்கெனவே இயங்கும் சில தென் மாவட்ட சிறப்பு ரயில்களின் சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(அக்.29) காலை 8 மணிக்கு தொடங்குகிறது . பயணிகள் தங்களது பயனத்திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
