கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: BRTS தான் சரி- மத்திய அரசு கறார் – union govt rejected coimbatore madurai metro rail project again in july 2026

சென்னையை அடுத்து இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த திட்டமிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்திய அரசு கிடுக்குப்பிடி காட்டி வருகிறது. குறிப்பாக கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த திமுக ஆட்சியில் கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக நவம்பரில் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் மக்கள்தொகையை காரணம் காட்டி இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கோவை, மதுரையில் பேருந்து சேவை விரிவாக்கம்

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பதிலாக கூடுதல் பேருந்துகளை இயக்கலாம். மாநகரப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மெட்ரோ ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதால், இந்த இரண்டு நகரங்களிலும் நேரத்தை மிச்சப்படுத்த முடியாது எனக் கூறியிருக்கிறது. இதன்மூலம் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் இரண்டாவது முறையாக மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.

கோவை மெட்ரோ நிராகரிப்பு: பாஜக சொல்லும் காரணம் என்ன? செந்தில் பாலாஜி கேள்வி

மக்கள்தொகை புள்ளிவிவரங்களில் ஏமாற்றம் – மத்திய அரசு முடிவு

கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டாம் என்று மத்திய அரசு சுட்டிக் காட்டுவதற்கு மக்கள்தொகை சார்ந்த புள்ளிவிவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வழக்கமாக பீக் ஹவர்களில் எவ்வளவு பேர் பயணிக்கின்றனர் என்பதை கவனித்தே எத்தகைய பொதுப் போக்குவரத்து சேவையை கொண்டு வரலாம் என்பது தீர்மானிக்கப்படும்.

மெட்ரோ ரயில் vs பேருந்து சேவை – எது முக்கியம்?

அம்சங்கள் மெட்ரோ ரயில் பேருந்து சேவை பயணிகள் எண்ணிக்கை 30,000 முதல் 80,000/ ஒரு மணி நேரத்திற்கு 10,000 முதல் 25,000/ ஒரு மணி நேரத்திற்கு செலவீனம் 200 முதல் 350 கோடி ரூபாய்/ ஒரு கி.மீக்கு 15 முதல் 40 கோடி ரூபாய்/ ஒரு கி.மீக்கு செயல்படுத்த தேவைப்படும் கால அளவு 5 முதல் 8 ஆண்டுகள் 2 முதல் 3 ஆண்டுகள் நிலம்/ சாலை வசதிகள் உயர்மட்ட அல்லது சுரங்க வழித்தடத்தில் நிலையங்கள் பிரத்யேக வழித்தடம்

மெட்ரோ லைட் சாத்தியமா – தமிழக அரசு ஏற்குமா?

இந்த விஷயத்தில் தான் கோவை, மதுரை ஆகிய நகரங்கள் பின்னடைவை சந்தித்துள்ளன. பீக் ஹவர்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மத்திய அரசு சுட்டிக் காட்டுகிறது. இதற்கிடையில் மெட்ரோ லைட் அல்லது மெட்ரோ நியோ போன்ற திட்டங்களை முன்னெடுக்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதுபற்றி தமிழக அரசு உரிய முறையில் ஆய்வு செய்து காய் நகர்த்த வேண்டியது அவசியம். இதற்கும் பிரத்யேக வழித்தடம், நிலையங்கள், பணிமனை உள்ளிட்டவை தேவைப்படுகின்றன. ஆனால் மெட்ரோ ரயில் சேவையை காட்டிலும் 4ல் ஒரு பங்கு மட்டுமே செலவாகும் என்பது கவனிக்கத்தக்கது.

மின்சாரப் பேருந்து சேவை விரிவாக்க திட்டங்கள்

ஒருவேளை மெட்ரோ ரயில் சேவையை தொடங்க முடிவு செய்தாலும் அதற்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். அதற்குள் மின்சாரப் பேருந்துகளை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். பீக் ஹவர் நெருக்கடியை குறைக்க முயற்சிக்கலாம். மக்கள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களில் அதிக கவனம் செலுத்தலாம். இதற்கு பலன் கிடைக்கும் பட்சத்தில் பொதுமக்கள் நெருக்கடியை ஓரளவு குறைத்து கொண்டே செல்லலாம் என்கின்றனர்.

Source link