கோவை மாணவி பாலியல் வழக்கு.. 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Coimbatore college student sexual harassment case judgement

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்துள்ளார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜிஷா செய்தியாளர்களிடம், “பாதிக்கப்பட்ட மாணவியும், ஆண் நண்பரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

அன்றைய தினம் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோதுதான் அவர்கள் 2 பேரையும் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம், அவரின் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். சம்பவம் நடைபெற்ற 126 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link