கௌதம் மேனன் மேல் முறையீட்டு மனுவில் தீர்ப்பு!

ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் கௌதம் மேனனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், 2008ஆம் ஆண்டு சிம்புவை வைத்து படம் எடுக்க கௌதம் மேனன் ரூ.4. 25 கோடி பெற்றதாகவும் பின்பு படம் எடுக்காததால் அந்த பணத்தை திருப்பி கேட்டபோது தரவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.  

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ரூ.4. 25 கோடியை தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டார். இது 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கௌதம் மேனன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்தனர். பின்பு தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு வழங்க வேண்டிய ரூ.4. 25 கோடியை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். 

Source link