சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை ஸ்ரீ கோமதி அம்மன் சிவலிங்க தரிசனம் அலங்காரத்தில் எழுந்தருளினார் மகா தீபாராதனை நடைபெற்றது பின்னர் வீதி உலா நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
