சசிகலா கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ‘அதிர்ச்சி’… ஏன்?

ராமதாஸ் – சசிகலா கூட்டணியால் யாருக்கு பாதிப்பு?

ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் அமைத்துள்ள கூட்டணி வெற்றிக்கோடு வரை செல்லுமா என்பதை பற்றியெல்லாம் யோசிக்க தேவையில்லை. ஆனால், இவர்களின் கூட்டணி நிச்சயமாக வட மற்றும் தென் மாவட்டங்களில் கணிசமான பாதிப்பை உருவாக்கும்.

ஏனென்றால், பாமக கட்சி ரீதியாகவும், அமைப்பு, நிர்வாக ரீதியாகவும் அன்புமணியின் வசம் இருந்தாலும், வன்னியர் சமூகத்தின் அடையாளமாக ராமதாஸ்தான் உள்ளார். எனவே வட மாவட்டங்களில் உள்ள சுமார் 100 தொகுதிகளில் ராமதாஸுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது.

அதேபோல, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகம் அடர்த்தியாக உள்ள சுமார் 60 முதல் 80 தொகுதிகளில் சசிகலாவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. இதுமட்டுமின்றி இவர்கள் தங்கள் கூட்டணியில் அந்தந்த தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு சிறிய கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்களுக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளனர்.

எனவே, இவர்கள் நிச்சயமாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளனர்.

Source link