சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி

சென்னை: புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மார்ச் மாதம் 21-ஆம் தேதி மதுரையிலும், 25, 26 ஆகிய தேதிகளில் கோவையிலும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நேர்காணல் கூட்டம் நடைபெற்றது.

கடந்த 30 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தொடர்ச்சியாக, அரசியல் களத்தில் நிலைத்து நின்று, செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சிக்கு, கூட்டணியில் நமது கட்சியின் வலிமைக்கு ஏற்ப எண்ணிக்கையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் வழங்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம் குறித்து விவாதிக்கப்பட்டது.

Source link