சட்டம் தனது கடமையை செய்யும்: சகோதரர் கைது குறித்து பிரிட்டன் மன்னர் கருத்து

லண்டன்: பதவியை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் கைதாகி உள்ள ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் வின்ஸ்டர் விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என பிரிட்டன் மன்னர் சார்லஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவரது சகோதரரும், பிரிட்டன் மன்னருமான சார்லஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் வின்ஸ்டர் குறித்த செய்தியையும், பதவியை தவறாக பயன்படுத்தியது குறித்தும் கவலையுடன் அறிந்தேன். இந்த விவகாரத்தில் சரியான முறையில் மற்றும் பொருத்தமான அதிகாரிகளால் முழுமையான, நியாயமான மற்றும் சரியான விசாரணை நடந்து வருகிறது. அவர்களுக்கு எங்களது முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும். சட்டம் தனது கடமையை செய்யட்டும் என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சார்லஸ் கூறியுள்ளார்.

கைது

மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் 3வது மகன் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன். அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டது. அதில் எந்தவித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துதுடன், அரண்மனையை விட்டு வெளியேறினார். முன்னதாக இளவரசர் பட்டத்தையும் துறந்தார்.

இச்சூழ்நிலையில், பதவியை தவறாக பயன்படுத்தியதாக ஆண்ட்ருவை போலீசார் கைது செய்தனர்.

Source link