தமிழ் பலருக்கு பேருந்து அல்லது ரயில் பயணத்தின் போது அருகில் இருப்பவர் சத்தமாக ரீல்ஸ் பார்த்து அல்லது பாடல்கள் கேட்டு கடுப்பேற்றிய அனுபவம் நிச்சயமாக இருக்கும்.
சில சமயங்களில், சத்தத்தை குறைக்கச் சொல்லி தொடங்கிய வாக்குவாதம் சண்டை வரை சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
பயணிகளின் நீண்டநாள் கோரிக்கை
இப்படிப்பட்ட சூழலில்தான் அரசு பேருந்துகளில் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் வீடியோ பார்ப்பதற்கும், பாடல்கள் கேட்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன்பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பயண நேரங்களில் பாடல் கேட்பதோ அல்லது ரீல்ஸ் பார்ப்பதோ பலரின் வழக்கமாகிவிட்டது.
சக பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு
ஆனால், சில நேரங்களில் அது மற்ற பயணிகளுக்கு பெரும் இடையூறாக மாறுகிறது. இதை நடத்துநர், ஓட்டுநர் அல்லது சக பயணிகள் சுட்டிக்காட்டினால், பல இடங்களில் வாக்குவாதம் மற்றும் தகராறாக மாறிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எங்கும் விஜய், எதிலும் விஜய்!!
இதனால், மெட்ரோ ரயில்களில் உள்ளதைப் போல அரசு பேருந்துகளிலும் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை ஒலியுடன் பார்ப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று பயணிகள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
போக்குவரத்துத் துறையின் புதிய உத்தரவு
இந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜ், அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், பயணிகள் சில விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், அவற்றை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள்
பயணத்தின் போது மொபைல் போனில் உரத்த குரலில் தொடர்ந்து பேசக்கூடாது.
மொபைல் போனில் ஸ்பீக்கரை இயக்கி பேசுவதையும், பாடல்கள் கேட்பதையும், வீடியோக்கள் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இயர்போன் அல்லது புளூடூத் சாதனங்களை பயன்படுத்தாமல் அதிக ஒலியில் இசை கேட்பது அல்லது வீடியோக்கள் பார்ப்பது முற்றிலும் கூடாது. சக பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும்.
பயணிகளுக்கு வரவேற்பு
இந்த புதிய உத்தரவு, அரசு பேருந்துகளில் அமைதியான மற்றும் நிம்மதியான பயணத்தை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக,சத்தம்காரணமாக அடிக்கடி ஏற்பட்ட வாக்குவாதங்கள் மற்றும் பயணிகளின் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாக இந்த உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர்.
Source link
