சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டலை தேர்தல் கமிஷன் விடுவித்தது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தலைமைச்செயலர், டிஜிபி, உள்துறை செயலர், சென்னை போலீஸ் கமிஷனர், பல மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதில், அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றியது. அவருக்கு பதில் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். அவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்தது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டலை தேர்தல் கமிஷன் விடுவித்துள்ளது. அவரை ஆயுதப்படை டிஜிபி ஆக நியமித்துள்ளது. இதனையடுத்து டேவிட்சன்தேவாசீர்வாதம் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆக தொடர்கிறார்.
