சந்தையை பதம் பார்த்த போர்: ரூ.7 லட்சம் கோடி இழப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் சரிவை சந்தித்தது. இதனால், முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு 6.82 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சியடைந்தது.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான நேரடி மோதல் மற்றும் அமெரிக்காவின் தலையீடு தீவிரமடைந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டு முக்கிய குறியீடுகளும் 2 சதவீதம் வரை சரிந்து முடிந்தன.

இந்த அதிரடி சரிவால், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 6.82 லட்சம் கோடி ரூபாய் குறைந்து, 456.55 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது.

சந் தை மதிப்பு மிக்க நிறுவனங்களான, ‘எல் அண்டு டி., ரிலையன்ஸ், மாருதி சுசுகி’ போன்றவை பெரும் சரிவை சந்தித்தன. போர் பதற்றங்கள் நிகழும்போது, நாடுகள் தங்களின் பாதுகாப்பு மற்றும் ஆயுத இருப்பை பலப்படுத்த முன்னுரிமை அளிக்கும். இது, பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் கி டைக்கும் என்ற எதிர்பார்ப்பை முதலீட்டாளர்கள் மத்தியில் உ ருவாக்கியதால், அதுசார்ந்த நிறுவன பங் குகள் ஏற்றத்தில் காணப்பட்டன.

பங்குகள் விலை கடுமையாக சரிந்தது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் முதலீட்டாளர்கள் எப்போதுமே பாதுகாப்பாக கருதும் தங்கம், வெள்ளி விலை சர்வதேச சந்தையில் ஏற்றம் கண்டது.

இ.டி.எப்.,கள் ஏற்றம் சந்தையின் அபாயத்தை அளவிடும் குறியீடான ‘இந்தியா வி.ஐ.எக்ஸ்.,’ நேற்று 19.48 சதவீதம் உயர்ந்து 16.37 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததன் விளைவாக, இந்தியாவிலும் அவை சார்ந்த இ.டி.எப்., பண்டுகள் ஏற்றம் கண்டன.

ஏமாற்றம் தந்த புதிய வரவு புதிதாக பட்டியலிடப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான ‘கிளீன் மேக்ஸ்’ நிறுவன பங்குகள், சந்தை வீழ்ச்சி காரணமாக சரிந்தன. இந்நிறுவனம், தனது வெளியீட்டு விலையான 1,053 ரூபாயிலிருந்து கிட்டதட்ட 10 சதவீதம் தள்ளுபடியில் பட்டியலானதால், முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Source link