சந்தை அதிர்ச்சியிலும் சரியாத அலுமினியம்

மேற்காசியாவில் போர் நீடித்து வரும் நிலையில், உலகளாவிய உலோக சந்தைகள் கடும் அதிர்வுகளை சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை ஏற்றம், பணவீக்கம் காரணமாக, மற்ற அடிப்படை உலோகங்களான செம்பு, ஜிங்க், நிக்கல் ஆகியவை அழுத்தத்தில் உள்ளன. இருந்தபோதிலும், அலுமினியம் மட்டும் தனித்துவமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த மார்ச் 30ம் தேதி, லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் அலுமினியம் விலை டன் ஒன்று கிட்டத்தட்ட 3,492 டாலராக உயர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை தொட்டு உள்ளது.

இந்தியாவில் எம்.சி.எக்ஸ்., சந்தையில், கடந்த 2ம் தேதி, ஏப்., மாதத்துக்கான முன்பேர ஒப்பந்தத்தில், அலுமினியம் ஒரு கிலோவின் விலை 354 ரூபாய் என்ற அளவில் முடிந்தது.

இந்த சூழலில், இந்திய பங்கு சந்தைகளில் அலுமினியம் உற்பத்தி மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் பெரும்பாலானவை கடந்த 2ம் தேதி ஏற்றத்துடனே காணப்பட்டன.

ஏற்றத்துக்கு காரணங்கள்

* மேற்காசியாவில் முக்கிய இரண்டு அலுமினிய உற்பத்தி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்ததால், உலகளாவிய சப்ளை குறைவு ஏற்படும் என்ற அச்சம்

* கட்டுமானம், போக்குவரத்து, பேக்கேஜிங் போன்ற துறைகளில் அதிக பயன்பாடு உள்ளதால், இதன் தேவை நிலையாகவே உள் ளது.

முதலீட்டாளர் கவனத்துக்கு

* உலகளாவிய சப்ளை குறைவு நீடித்தால், அலுமினியம் விலை மேலும் உயர வாய்ப்பு

* பிற உலோகங்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த அபாயத்துடன் நிலையான வளர்ச்சி சாத்தியம்

* கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளின் வளர்ச்சி, நீண்டகால தேவை அதிகரிக்க உதவும்

* குறுகிய கால அதிர்வுகளை கவனத்தில் கொண்டு, நீண்டகால பார்வையில் அலுமினியத்தை பரிசீலிக்கலாம்.

Source link