போர் பதற்றத்தால் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிலவினாலும், இந்திய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு மீது கொண்டுள்ள நம்பிக்கை குறையவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகளில் 25,978 கோடி ரூபாய் புதிய முதலீடுகள் வந்துள்ளன. இது, ஜனவரி மாதத்தை விட 8 சதவீதம் அதிகமாகும்.