சந்தை துளிகள்

அதிக முதலீடு வந்ததால் ஸ்ரீராம் பைனான்ஸ் உயர்வு

ஜ ப்பானின் ‘எம்.யு.எப்.ஜி., வங்கி’க்கு 39,617 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஒதுக்கீடு செய்ய, ‘ஸ்ரீராம் பைனான்ஸ்’ நிறுவன இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. இந்த வலுவான முதலீட்டு செய்தியால், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 11.26 சதவீதம் உயர்ந்து, நிப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டிய பங்காக உருவெடுத்தது.


ஏற்றம் கண்ட எண்ணெய் நிறுவனங்கள்

போ ர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 16 சதவீதத்துக்கும் மேல் சரிந்து, ஒரு பேரல் கிட்டத்தட்ட 92 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் நேற்று கணிசமாக உயர்ந்தன.

விண்ணில் பறந்த விமான நிறுவன பங்குகள்

க ச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், விமான எரிபொருள் செலவு குறையும் என்ற சாதகமான சூழலில், விமான நிறுவனங்களின் பங்குகள் பெரும் எழுச்சி கண்டன. ‘இண்டிகோ’ நிறுவன பங்கு 11 சதவீதம் வரை உயர்ந்தது. ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவன பங்கு 5 சதவீதம் அதிகரித்து, அதன் ‘அப்பர் சர்க்யூட்’ எல்லையை தொட்டது.

போனஸ் பங்கு அறிவிப்பால் எல்.ஐ.சி., உயர்வு

ப ங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு, முதல்முறையாக போனஸ் பங்குகள் வழங்குவது குறித்து ஆலோசிக்க ஏப்., 13ம் தேதி இயக்குநர் குழு கூட்டம் நடைபெறும் என எல்.ஐ.சி., அறிவித்துள்ளது. இந்த எதிர்பார்ப்பால் இதன் பங்கு விலை ஒரே நாளில் 6 சதவீதம் வரை உயர்ந்தது.

Source link