சனம் ஷெட்டியிடம் மைக் வாங்கப்பட்டது ஏன்? போராட்டத்தில் நடந்தது இதுதான்: நாதக இடும்பாவனம் கார்த்திக் – idumbavanam karthik comments on sanam shetty speech at neet against protest

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டிலும் பெரியளவில் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் பாலன் இல்லத்தில் நடக்கும் போராட்டத்தில் சமுக செயற்பாட்டாளர்கள், திரையுலகை சார்ந்தவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சனம் ஷெட்டி நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பேசியுள்ள விஷயங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நாதகவை சார்ந்த இடும்பாவனம் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவாக சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இளைஞர்கள், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் ஆர்வத்தில் பங்கேற்று வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டு தங்களின் ஆதரவினை தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் மூலமாக மக்களிடையே பரிட்சயமான சனம் ஷெட்டி இந்த போராட்டதில் பங்கேற்றார். அப்போது அவர் இங்கு எத்தனை பேர் கரப்பான் பூச்சி கட்சி உறுப்பினர்கள்? எத்தனை பேர் மாணவர்கள்? எத்தனை பேர் பொதுமக்கள்? என வெளிப்படையாக கேள்வி எழுப்பியது சலசலப்பினை கிளப்பியது. அதோடு சம்பந்தமே இல்லாமல் அந்த இடத்தில் தளபதியின் தீவிரமான ஃபேன். நேற்றுதான் முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்துவிட்டு வந்துள்ளேன் என்றார்.

அவருடைய இந்த பேச்சை கேட்டு அதிருப்தி அடைந்த போராட்டக்காரர்கள், சனம் ஷெட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தொடர்ந்து நான் பேசவா? இல்லை போகவா? என்று கேட்க, அவரை பேசுவதற்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பின்னரும் சனம் சர்ச்சைக்குரிய வகையில் பேச, அவருடைய மைக்கை அருகில் இருந்தவர்கள் பிடிங்கினார். இதனையடுத்து அங்கிருந்து கோபமாக சனம் ஷெட்டி வெளியேறினார்.

அதன்பின்னர் வெளியில் வந்து பத்திரிக்கையாளர்களிடம் தன்னை பேச விடாமல் மைக்கை பிடுங்கி விட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் அதே பாலன் இல்லத்தில் போராட்டத்தில் பங்கேற்ற நாதகவை சார்ந்த இடும்பாவனம் கார்த்திக், அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள நிலையில், இணையத்தில் தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

அதில், நான் தளபதி ஃபேன். நேற்றைய தினம் FDFS காட்சி பார்த்துட்டு வந்தேன் என்று சொன்ன உடனே, கூட்டம் ஆர்ப்பரிக்கும் என்று எதிர்பார்த்தது அந்த அம்மா. இதனை எதற்காக இங்கு வந்து பேச வேண்டும் என்று மொத்த கூட்டமும் எதிர்ப்பு தெரிவித்த்து. நீட் பற்றி பேசமால் அங்கு கூடி இருந்தவர்களை சீண்டும் விதமாக பேசியதால் ஒலிவாங்கியை வாங்கினார்கள். அவ்வளவே என நடந்த சம்பவங்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதோடு பெயருக்கு பின்பால் சாதியை வைத்துக் கொண்டு, அதனை பெருமையுடன் சொல்லித் திரியும் அந்த பெண்மணி செய்தது மிக மிக மலினமான கவன ஈர்ப்பு அரசியல். இவ்வாறு கடுமையான விமர்சனங்களையும் தன்னுடைய பதிவில் இடும்பாவனம் கார்த்திக் முன்வைத்துள்ளார். இதனையடுத்து அவரின் பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link